Total Vistors : 44928 Repetated Vistors : 4128 Today Vistors : 1 info@saivaperavai.com
     
           
LiveZilla Live Help  
       
Application Download
நலமே விளைக! நலமே வி‍‍ழைக!!

நிறைந்த அன்புடையீர்/வணக்கம்,


உங்ளை இணையதள வாயிலாகத் தொடர்பு கொள்ளவும் அதன் வழி இணைந்து செயல்படவும் ஒரு வாய்ப்பாக 'கோவை சைவப்பெருமக்கள் பேரவை' இவ்விணையதளத்தினை உருவாக்கியுள்ளது. அறிமுகத்தால் அகம் மிக மகிழ்கின்றோம். முதலில் இப்பேரவைபற்றிய சில தகவல்களை இங்கு பதிவு செய்கிறோம். ஒருவர் ஒருவரை அறிமுகமாகி ஒருவர் இல்ல நிகழ்ச்சிகளில் ஏனையோர் குடும்பத்துடன் பங்கேற்று நல்லுறவு கொண்டு இடம் பெயர்ந்து வாழும் தனிமை தோன்றாவண்ணம் வாழ்ந்து, சமுதாயப்பணிகளை ஆற்றிட, உருவாக்கிய அமைப்பே 'கோவை சைவப்பெருமக்கள் பேரவை'.


நீண்டகால இப்பேரவையின் பணிகளில் குறிப்பிடத்தக்கவை சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம். விடுதலை வீரராம் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்களின் நூற்றாண்டு விழா, வ.உ.சி விழாமலர், வெள்ளி விழா, வெள்ளி விழா மலர். சிவபுண்ணியம் மலர், கொங்குமண்டல மாநாடு தக்கார்க்கு 'திருநாவுக்கரசர் விருது', தொழில் முனைவோர்க்கு 'தொழில்வளர் நாயகர் விருது' வழங்கல் திருமணத்தகவல் பரிமாற்ற விழா, சமுதாயப் பொது நலப்பணிகள் ஆகியன செய்த இப்பேரவை, நம்மவர் குடி வாழ்வதற்காக 'சிவநகர்' எனும் ஒரு குடியிருப்பினையும் உருவாக்கியுள்ளது. மேலும் பேரவைக்கெனத் தனி அரங்கம் ஒன்றையும் பெற்றுள்ளது.


பணியும், தொழிலும், வணிகமும் உள்ளிட்ட காரணங்களால் நம்மில் பலரும், மாநிலம் கடந்தும், மாக்கடல் கடந்தும் வேற்றுப்புலங்களால் வாழும் சூழலில் உள்ளோம். எனினும் நம் இனத்தொடர்பும், மரபு, கலாச்சாரப் பாரம்பரியத் தொடர்பும் நம்மோடு தொடர வேண்டும் என்று ஆவலோடு உள்ளோம். அதிலும் மிக முக்கியமாக, பிள்ளைகளின் திருமணத்தினை உறுதி செய்யும் நி‍லையினில், நம் இனத்தில் உள்ள ஏற்ற மணமக்கள் பற்றிய தகவல் அறிய வேண்டிய மிகுந்த ஆர்வமுடன் முயல்கிறோம். அவ்வகையில் நம்மவர்க்கு இந்த www.saivaperavai.com இணையதளம் உற்ற நண்பராய் உதவும், உறவுப் பாலமாக அமையும் என முழுமையாக நம்புகிறோம். நீங்கள் உங்கள் மற்றும் உங்கள் உறவினர் குடும்பங்களில் உள்ள மணமக்கள் பற்றிய முழுமையான தகவல்களை இதில் பதிவு செய்யலாம். இதனால் இத்தகவல், உலக‍ெங்கும் வாழும் நம்மவர் அனைவரையும் எளிதில் சென்றடையும் நல்வாய்ப்பு ஏற்படுத்தி தந்திருக்கிறது.


இந்நல் வாய்ப்பினை நம்மவர்க்குத் தந்து உதவுவதற்காகவே, இவ்விணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பயன் பெறுக. இத்தளத்தில் இடம்பெறும் தகவல்கள் எல்லாம் அத்தகவல்களைப் பதிவு செய்தோரின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் இடம் பெறுகிறது. எனவே, இத்தகவல்களின் அடிப்படையில் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை தனிப்பட்ட முறையில் விசாரித்துத் தெளிவு பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.


Home Register Latest Profile Success Stories News Events Search
Copyright © 2011 All Rights Reserved. Powered by NETTO LOGIK